Wednesday, July 1, 2009

லட்டு சாப்பிடறீங்களா எல்லாரும்....


கைக்குள் அடங்கி தின்னுதல்
என்னா ஒரு சூப்பரான சுவை

இப்படி ஆளாளுக்கு பாசமழை பொழிஞ்சா என்னதான் பண்ணுவேன்



ஆத்தி எம்புட்டு லட்டு


Friday, June 5, 2009

தேவதையானவள்..




என் பொழுதுகள்
இருளை நோக்கி நடக்க ஆரம்பித்த
ஒரு அந்திம பொழுதில்
என் செவிகளை கூர்மையாக்கின
உன் குரல்!

சிலகணங்களில்
துண்டிக்கப்பட்ட குரலின் இனிமை
என்னைவிட்டு அகலாமல் அடம்பிடித்து
கொண்டிருக்கையில்

வெளிச்சங்களற்ற இரவில்
குறுந்தகவலில் அன்பை எனக்கு
அனுப்பிவிட்டிருந்தாய்!

செவியிலிருந்து
சிந்தை வரை அந்தகுறுந்தகவல்
உன் குரலானால் இன்னும் எத்தனை
அழகாயிருக்கும் என்று சிந்திக்கையில்

அந்த
அழகிய குரலுக்கான உருவம்
தேடி அலைந்துகொண்டிருக்கிறது
என் நினைவுகள்
ஒரு வனாந்திரத்தில்!

முகமறைத்த
அழகியலோடு இறகுகளற்ற
உருவம் குறுக்கீடுசெய்கையில்

அங்கேயே
நின்றுகொண்டு இதோ உனக்கான
தேவதை யென்றது
என் கவிதை!

Thursday, May 28, 2009

ஆயுதக்காதல்


இந்த நவீன துப்பாக்கியின்
குண்டுகள் துளைத்திருக்குமா?
என் இதயத்தை இத்தனை வேகமாய்!
எந்த ஹைடெக் டெக்னாலஜியை
வைத்து படைத்தான் உன் பார்வையை
அந்த பிரம்மன்?
வெடிகுண்டுகளால்
வெடித்திருக்குமா என் இதயம்
உருத்தெரியாத அளவிற்கு?
அணுக்களை பிளாக்காமல்
இதழ்களை பிளந்துவரும் உன்
புன்னகையின் அணுக்களின் சக்தி என்ன?
கத்திகள்
என்னை கிழித்திருக்க்குமா
இத்தனை ஆழமாய்?
இதயத்தின் உள்வரை
நுழைந்துவிடுகிறதே உன் பேச்சு!
தொடர்ந்து
துளைத்துகொண்டே இருக்குமா?
இந்த கனரக ஆயுதம்..
சல்லடையாய்
ஆக்கிவிட்டதே உன் நினைவுகள்!
காதல் ஆயுதத்தால்
காயம் கண்டேன்!

Tuesday, May 26, 2009

இவையும் காதல் கவிதைகள்

















இந்த கண்ணீர்
எனக்கானதா?
என்
பணப்பைக்கானதா?













எனை பற்றியே
சிந்திப்பதாய் சொல்கிறாய்!
வந்தவுடன் ஐஸ்கிரீம் கடைக்கல்லவா
இழுக்கிறாய்?













சோகமாய் முகத்தை
வைத்துகொண்டு எப்போதும்
அழுதே சாதித்துவிடுகிறாய்!
புதுப்பட டிக்கெட்டையும்
பாப்கார்ன் கோப்பையையும்














இதழ்திறந்து
உன் இதயம் திறந்தாய்!
பூக்கள் வாங்கியே
என் தனம் துறந்தேன்